தூத்துக்குடி:கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151ஆவது பிறந்த தினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொண்டாடப்பட்டது. ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி பிறந்த இல்லத்தில் அவரது சிலைக்கு மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில் ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகையா, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.