கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு அமுல்படுத்தியுள்ளது. கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் அதிகமாகக் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கை மீறி நடைபெற்ற கோயில் திருவிழா - Thoothukudi district news
தூத்துக்குடி: கரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், விளாத்திகுளம் அருகே க கோயில் திருவிழா நடைபெற்றது தொடர்பாக வீடியோ வெளியாகியுள்ளது.
கரோனா ஊரடங்கை மீறி நடைபெற்ற கோயில் திருவிழா
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுர காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு இரவில் கபடி போட்டி, பகலில் கயிறும் இழுக்கும் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் சமூக இடைவெளி இல்லாமலும், முகக் கவசம் அணியமாலும் பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பான வீடீயோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.