தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் - தூத்துக்குடி அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்

By

Published : Oct 4, 2021, 6:33 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் - 35, மூன்று சக்கர வாகனம் -1, நான்கு சக்கர வாகனங்கள் - 15 என மொத்தம் 51 வாகனங்கள் மாவட்ட காவல் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

அவைகள் யாவும் இன்று (04.10.2021) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் பொது ஏலம் விடப்பட்டது.

இந்த ஏலத்தில் குழு உறுப்பினர்கள், தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்பட பலர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: 24% வட்டித்தருவதாக ஏமாற்றிய நபருக்கு ரூ.4.75 கோடி அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் சிறை!

ABOUT THE AUTHOR

...view details