தூத்துக்குடி: Kattapomman Birthday Anniversary: இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு குரல் கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மனின் 263ஆவது பிறந்தநாள் விழா, பாஞ்சாலங்குறிச்சியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
1974ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி கட்டிய வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக் கோட்டையில் உள்ள கட்டபொம்மனின் உருவச் சிலைக்கு கட்டபொம்மனின் நேரடி வாரிசுகள் வீமராஜா என்ற ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் துரை, வீரசக்கம்மாள், ராஜமல்லம்மாள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, பாஞ்சாலக்குறிச்சி கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள வீரசக்க தேவி ஆலயத்தில் பூஜை செய்த மாலைகளுடன் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டைக்குச் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின் தொடர்ந்து வீரசக்கதேவி ஆலய குழுவினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கட்டபொம்மன் பண்பாட்டுக் குழுவினர், பாஞ்சாலங்குறிச்சி பஞ்சாயத்துத் தலைவர் கமலாதேவி யோகராஜ், ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் நிஷாந்தினி, சுற்றுலாத் துறை அலுவலர் சீனிவாசன், கட்டபொம்மனின் வம்சாவழியினர் என ஏராளமான பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டு வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
கட்டபொம்மனின் பிறந்தநாள் விழா இதையும் படிங்க: பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கக் கோரி மண்பானை உடைத்து போராட்டம்