விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் குரல் கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மனின் 221 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள நினைவு கோட்டையில் அவரது திருவுருவ சிலைக்கு, வீரபாண்டிய கட்டபொம்மனின் சந்ததியர் மற்றும் வம்சாவளியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னையில் கட்டபொம்மனுக்கு சிலை - வம்சாவளியினர் கோரிக்கை! - தூத்துக்குடி செய்திகள்
தூத்துக்குடி: வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது வம்சாவளியினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் மரியாதை செலுத்தத் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து வீரபாண்டிய கட்டபொம்மனின் சந்ததியினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ சென்னையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை நிறுவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் வம்சாவளியினர் 202 குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும், சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த பொது மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில், புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும் “ எனக் கேட்டுக் கொண்டனர்.