தூத்துக்குடி: வீரபாண்டிய கட்டபொம்மன் 222 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி அருகே கயத்தாற்றில் உள்ள வீரபாண்டி கட்டபொம்மன் மணி மண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அவருடன் அவரது மகன் துரை வையாபுரி, கட்சி நிர்வாகிகள், பல்வேறு கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் இன்று(அக்.16) நினைவு தினத்தை முன்னிட்டு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ கூறுகையில், வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடுவதற்கு முன்பு அவர் கூறியது ’வீரர்கள் தோன்றுவார்கள் மீண்டும் இந்த மண் விடுதலை செய்யப்படும்’ என்று சபதம் செய்துவிட்டு அவர் மடிந்தார். பின்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நிகழ்வுகள் நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் வெளிவந்தது.
நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் திரைப்படம்
பின்னர் நடிகர் சிவாஜி கணேசன் நடிப்பில் திரைப்படமாக உருவாகி. அந்தப்படம் ஆசிய நாட்டின் திரைப்பட போட்டியில் பரிசும் பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு சிவாஜியின் புகழ் திசை எங்கும் பரவியது. கயத்தாரில் அவரது சொந்த செலவில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை நிறுவினார்.