தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சுதந்திரப் போராட்ட வீரன் அழகு முத்துக்கோனின் 265-வது பிறந்தநாள் விழா

சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 265-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்‌.

சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 265 வது பிறந்தநாள் விழா
சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 265 வது பிறந்தநாள் விழா

By

Published : Jul 11, 2022, 9:45 PM IST

தூத்துக்குடி: சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 265 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாரங்குளத்தில் வீரன் அழகு முத்துக்கோனின் மணிமண்டபத்தில் அவரது திரு உருவச் சிலைக்கு, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் கீதாஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை எம்.பி, அமைச்சர்கள் வழங்கினார்.

சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 265 வது பிறந்தநாள் விழா

இதே போல் வீரன் அழகுமுத்துக்கோன் நல சங்கம் சார்பில் தலைவர் மாரிச்சாமி தலைமையில் வீரன் அழகுமுத்துக்கோன் திரு உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் செயலாளர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் ராமர், துணைத் தலைவர் முருகன், இணைத் தலைவர் மாரியப்பன், துணைச் செயலாளர் சேகர், இணைத் தலைவர் முத்துராஜ், இணைச் செயலாளர் குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க:அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா - வாரிசுதாரர்கள் தமிழ்நாடு அரசு மீது குற்றச்சாட்டு!

ABOUT THE AUTHOR

...view details