தூத்துக்குடி:கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் சீறாப்புராணம் காப்பியம் எழுதிய தமிழறிஞர் அமுத கவி உமறுப் புலவரின் 379ஆவது பிறந்தநாள் விழா இன்று (அக்.23) கொண்டாடப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையில் நடந்த விழாவில், மக்களவை உறுப்பினர் கனிமொழி, மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி. சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.