இலங்கையில் விரலி மஞ்சள் டன் ஒன்றிற்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது. எனவே இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2 டன் விரலி மஞ்சள் பறிமுதல்! - விரலி மஞ்சள்
தூத்துக்குடி: படகு மூலம் தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த இரண்டு டன் விரலி மஞ்சளை பறிமுதல்செய்த கியூ பிரிவு காவல் துறையினர் கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரை கைதுசெய்தனர்.
கடத்தல்
இதன் காரணமாக இலங்கையில் மஞ்சளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாடு கடற்கரை வழியாக இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவது அதிகரித்துவருகிறது.
தகவலையடுத்து அங்கு சென்று பார்த்தபோது சரக்கு வாகனத்திலிருந்து விரலி மஞ்சள் மூட்டைகளை இலங்கைக்கு கடத்துவதற்காகப் படகில் ஏற்றிக்கொண்டிருந்தனர்.
இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரைச் சுற்றிவளைத்துப் பிடித்த காவல் துறையினர் அவர்களைக் கைதுசெய்து, அவர்களிடமிருந்து இரண்டு டன் மஞ்சள், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனம் பறிமுதல்செய்யப்பட்டன. பின்னர் தூத்துக்குடி மரைன் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. முதற்கட்ட கியூ பிரிவு காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி தாளமுத்து நகர் நேரு காலனியைச் சேர்ந்த ஜெயக்குமார் (45), திரேஸ்புரம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நூருல் அமீது (37), ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேர் என்பது தெரியவந்தது. கைதுசெய்யப்பட்ட நான்கு பேரிடமும் மரைன் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.