தூத்துக்குடி:மதுரை மாவட்டம் பெருமாள் மலை பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாதன். இவர் தனது நண்பர்களுடன் மதுரையிலிருந்து அம்பாசமுத்திரத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணியளவில் (நவம்பர் 27) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்கையில் இடைசெவல் பகுதியில் மழை பெய்துகொண்டிருந்தது.
அப்போது கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் முழுவதும் சேதமடைந்தது. காரில் பயணித்த மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த கோபால், முருகன் ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.