தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேர்தல் பணிக்கு செல்லும் காவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு

தூத்துக்குடி:  தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் 2300 காவல்துறையினர், தேர்தல் பாதுகாப்புப் பணிக்குச் செல்லவிருப்பதால், அவர்களுக்கு இன்று காலை முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் வாக்குபதிவு

By

Published : Apr 7, 2019, 5:18 PM IST

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, மாவட்டங்களில் பணிபுரியும் காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்புப் பணிக்குச் செல்லவிருப்பதால் அவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் முன்கூட்டியே வாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் 2300 காவல்துறையினருக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய இடங்களில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. காமராஜ் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் தூத்துக்குடி எஸ்.பி முரளிரம்பா, தனது வாக்கினை முதலில் பதிவு செய்தார்.

தொடர்ந்து பிற காவல்துறையினர் வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திப் நந்தூரி, தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் நடப்பதைப் பார்வையிட்டனர். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்படுகிறது. மே 23ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது இந்த வாக்குகளும் சேர்த்து எண்ணப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details