தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வாக்கு எண்ணும் மையத்திற்குள் திடீரென நுழைந்த லாரிகள் - திமுகவினர் முற்றுகை - வாக்குப்பதிவு இயந்திரங்கள்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 5 லாரிகளில் பயன்படுத்தாத வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

evm
evm

By

Published : Apr 7, 2021, 9:48 AM IST

சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 6 தொகுதிகளிலும் இருந்து வந்த வாக்குப்பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும், தூத்துக்குடியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமான அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எந்த வித ஆவணங்களும் இன்றி 5 கண்டெய்னர் லாரிகள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்ததைக் கண்ட திமுகவினர் அதுகுறித்து கேள்வி எழுப்பினர்.

ஆனால், முறையாக பதிலளிக்காமல் வெவ்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டதால், சந்தேகமடைந்த திமுகவினர் லாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருடன் திமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் லாரிகளில் கொண்டு வரப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும், வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதானால் மாற்றுவதற்கும், அதுபோல் வாக்குப்பதிவு மையங்களில் பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் திடீரென நுழைந்த லாரிகள் - திமுகவினர் முற்றுகை

மேலும், இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தையும் பாதுகாப்பு குடோனுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து, திமுகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: அத்துமீறினாரா ஸ்ருதி ஹாசன்? பாஜகவினர் புகார்

ABOUT THE AUTHOR

...view details