தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கும் கட்சிக்கே தேர்தலில் ஆதரவு! - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா

தூத்துக்குடி: எழுத்துப்பூர்வமாக வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளிக்கும் கட்சிக்கே சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதரவு எனத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டியளித்துள்ளார்.

tta
tta

By

Published : Feb 17, 2021, 11:31 AM IST

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில் தூத்துக்குடியில் தனியார் மண்டபத்தில் வணிகர் சங்க முப்பெரும் விழா நடைபெற்றது. அப்போது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விக்கிரமராஜா கூறியதாவது:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை நிர்ணயிக்கும் சக்தியாக வணிகர்கள் விளங்கி வருகின்றனர். கரோனா காலத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காகத் திண்டாடிய வேளையில் சில்லறை வணிக வியாபாரிகள் தான் பெரிதும் அரசுக்கு துணை நின்றனர்.
இருந்தபோதிலும் இந்த அரசு வணிகர்களை கிள்ளுக்கீரையாக எடை போடுகிறது. ஊரடங்கு தளர்வுக்குப பின் கெடுபிடிகளையும், அடக்குமுறைகளையும் வணிகர்கள் மீது கையாண்டு வருகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பு, சுங்க கட்டண முறையில் இரட்டிப்பு கட்டணம் வசூலித்தல், வணிக நிறுவனங்களை முன்னறிவிப்பு இன்றி காலி செய்தல் என வணிகர்களை நசுக்கி வருகின்றனர்.

இவையனைத்திற்கும் தீர்வாக பணிகளை ‘ஒரே சொல் ஒரே வாக்கு’ என்ற அடிப்படையில் வணிகர்களை ஒருங்கிணைத்து வருகிறோம். வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அரசையே வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதரிப்பதாக தீர்மானித்துள்ளோம்.

வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் கட்சியினருடன் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். முன்னதாக வணிகர்களின் கோரிக்கைகளை அரசின் காதுகளுக்கு எட்ட செய்யும் வகையில் இன்னும் இரு தினங்களுக்குள் மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதைத்தொடர்ந்து கடையடைப்பு போராட்டமும் படிப்படியான போராட்ட முன்னெடுப்புகளும் இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details