திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநரும்மான எஸ்.ஏ. சந்திரசேகர் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் உணர்வு என்பது மோடிக்கு எதிரானது என்று கூறினார். மேலும், சிறுபான்மையினரும் தாழ்த்தப்பட்டவர்களும் மோடி வந்துவிடக் கூடாது என்று அஞ்சி நடுங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக மக்களின் நிலைப்பாடு மோடிக்கு எதிரானது -எஸ்.ஏ. சந்திரசேகர் - bjp
திருநெல்வேலி: பாராளுமன்றத் தேர்தலில் தமிழக மக்களின் நிலைபாடு மோடிக்கு எதிரானது என நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
எஸ்.ஏ. சந்திரசேகர்
ஓட்டுப்போடும் முறை குறித்து அவர் கூறுகையில், பழைய வாக்கு சீட்டு முறையே சிறந்த முறை என்றும், மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு போத்தான்னை அழுத்தினால் வேறு கட்சிக்கு வாக்கு பதிவதால் நம்பகத்தன்மை இல்லை என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 'தமிழ்ராக்கர்ஸ்' போன்ற வலைதளங்களை மத்திய அரசு நினைத்தால் மட்டுமே ஒழிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.