தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள எஸ்.டி.ஆர் பள்ளியில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
"ஒரே இந்தி மொழி என்பதை ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரவர் தாய் மொழியையே முதல் மொழியாக கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் அசம்பாவிதங்களை ஏற்படுத்தும் விதமாக அனுமதி பெறாமல் பொது இடங்களில் வைக்கப்படும் பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தேர்தலுக்காக ஆரம்பிக்கப்பட்டது அல்ல. லட்சியத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது. நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் சிறப்பான கூட்டணி பலத்துடன் வெற்றிபெற்று உள்ளாட்சியில் நல்லாட்சியை ஏற்படுத்துவோம்.
த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி ஐந்தாம், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு புகுத்துவது என்பது சுமையை ஏற்படுத்தும். ஆகவே இது குறித்து அரசு முறையான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதாக சொல்லும் நிலையை நீக்குவதற்கு மத்திய அரசும், நிதித் துறையும் இணைந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இந்திய பொருளாதாரத்தின் மீது மத்திய அரசின் கண்காணிப்பு தொடர்ந்து இருக்கவேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
எஸ். டி. ஆர் பள்ளி வளாகத்தில் அபி நிறுவனங்களின் தலைவர் எஸ். தர்மராஜ் திருவுருவ சிலையை திறந்து வைத்த போது... காவிரி கூக்குரல் பயணத்தின் முக்கிய நோக்கம் காவிரியில் தொடர்ந்து தண்ணீர் வர வேண்டும். காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் மரம் நடவேண்டும் என்பதுதான். தண்ணீர் என்பது பயிர் பிரச்னை மட்டுமல்ல. உயிர் பிரச்னையாகவும் மாறி உள்ளது. ஆகவே நிலத்தடி நீரை பெருக்குவதற்கு 130 கோடி இந்தியர்களும் முயற்சியை எடுக்க வேண்டும்" என்றார்.