தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது! - Three arrested by Thugs Law in Thoothukudi

தூத்துக்குடி: கொலை முயற்சி, பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது
கைது

By

Published : Feb 5, 2021, 3:54 PM IST

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலையம் படுக்கப்பத்து பகுதியைச் சேர்ந்த பொன்னம்பலநாதன் (45), கழுகுமலை ஆறுமுகநகர் பகுதியைச் சேரந்த காளிராஜ் (22), கோவில்பட்டி கருணாநிதி நகரைச் சேரந்த கற்குவேல் (21) ஆகியோர் மீது கொலை முயற்சி, பாலியல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு நிலுவையில் உள்ளன. எனவே 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் பொன்னம்பலநாதன், காளிராஜ், கற்குவேல் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில், 3 பேரையும் காவல் துறையிரன் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுசெய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details