தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: தமிழ்நாடு அணி வீரர்களுக்கு கோவில்பட்டியில் சிறப்பான வரவேற்பு!

ஆசிய கோப்பையில் சிறப்பாக விளையாடிய தமிழ்நாடு அணி வீரர்களுக்கு கோவில்பட்டியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அணி வீரர்களுக்கு கோவில்பட்டியில் சிறப்பான வரவேற்பு
தமிழ்நாடு அணி வீரர்களுக்கு கோவில்பட்டியில் சிறப்பான வரவேற்பு

By

Published : Jun 5, 2022, 6:15 AM IST

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் மே 23 முதல் ஜூன் 1வரை நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இளம் வீரர்களை கொண்ட இந்திய ஹாக்கி அணி சிறப்பாக விளையாடி வெண்கல பதக்கத்தை வென்றது. அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

இதில் இந்திய ஹாக்கி அணியில் சுமார் 13 ஆண்டுகளுக்குப் பின்னர், கோவில்பட்டியில் உள்ள சிறப்பு விளையாட்டு விடுதியில் பயின்ற கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன், அரியலூரை சேர்ந்த கார்த்தி ஆகியோர் தமிழ்நாட்டிலிருந்து தேர்வு பெற்றனர். ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதியது. இது தமிழ்நாடு அணி வீரர் அடித்த முதல் கோல் தான் ஆட்டத்தின் டிராவை நோக்கிக் கொண்டு சென்றது.

தமிழ்நாடு அணி வீரர்களுக்கு கோவில்பட்டியில் சிறப்பான வரவேற்பு

இந்தத் தொடரில் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா – தென்கொரியா மோதின. இந்த ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இந்திய அணி தரப்பில் நிலம் சஞ்ஜீப், மணீந்தர் சிங், சேஷே கவுடா, மாரீஸ்வரன் தலா ஒரு கோல் அடித்தனர். இதில் தமிழ்நாடு அணி வீரர் மாரீஸ்வரன் கடைசி நிமிடத்தில் அடித்த கோல் தான் போட்டியை டிரா செய்தது மட்டுமின்றி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றது.

ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய தமிழ்நாடு வீரர்கள் மாரீஸ்வரன் மற்றும் கார்த்தி இருவரும் நேற்று (ஜூன் 04) கோவில்பட்டி நகருக்கு வந்தனர். அவர்கள் இருவருக்கும் கோவில்பட்டி ரயில்வே நிலையத்திலிருந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இளம் ஹாக்கி வீரர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இருவரையும் மேளதாளம் முழங்க அழைத்துச் சென்றனர். ரயில்வே நிலையம் முதல் மாரீஸ்வரன் வீடு வரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இதன் பின்னர் இன்று மதியம் இருவருக்கும் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இதையும் படிங்க:உலக நாயகனுக்காக சாகசம் செய்த சிலிண்டர் நாயகன்

ABOUT THE AUTHOR

...view details