தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காற்று மாசுவை குறைக்க சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணி! - Cyclothon Awareness Rally

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் உடலுறுதியை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை ஆணையாளர் ஜெயசீலன் தொடங்கிவைத்தார்.

rally
rally

By

Published : Dec 26, 2020, 11:52 AM IST

வாகன புகையால் ஏற்படும் காற்று மாசுவை குறைப்பதற்கும், உடலுறுதியை வலியுறுத்தியும் 'மாசில்லா தமிழகம்' உருவாக்குவோம் என்னும் தலைப்பின்கீழ் மத்திய, மாநில அரசுகள் பிட் இந்தியா திட்டத்தை ஊக்குவித்துவருகின்றன.

அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பில் பிட் இந்தியா திட்டத்தின்கீழ் இன்று (டிச. 26) விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. தூத்துக்குடி ரோச் பார்க் முதல் முயல் தீவு வரை சென்று திரும்பி மீண்டும் ரோச் பார்க் வரும்வகையில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

பேரணியைத் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் தலைமை தாங்கி தொடங்கிவைத்து கலந்துகொண்டார். இந்தப் பேரணியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன், மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சைக்கிள் ஓட்டிச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details