தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திருச்செந்தூர்: 1 கோடியை தாண்டிய உண்டியல் காணிக்கை - அக்டோபர் மாத உண்டியல் காணிக்கை

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 27 லட்சத்து 859 ரூபாய் கிடைத்துள்ளது.

Thiruchendur Subramanya Swamy Temple

By

Published : Oct 19, 2019, 8:40 AM IST

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை நடைபெறும். அந்த வகையில், அக்டோபர் மாதத்திற்கான காணிக்கை எண்ணிக்கை கோவிந்தம்மாள் ஆதித்தனார் மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், கோயில் நிர்வாக அலுவலர் ப.அம்ரித் கலந்துகொண்டார்.

இதையடுத்து, சிவகாசி வேதபாடசாலை உழவாரப்பணிக்குழுவினர், கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர். அதில், அக்டோபர் மாதத்திற்கான உண்டியல் காணிக்கையில் ஒரு கோடியே 27 லட்சத்து 859 ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளது.

உண்டியல் காணிக்கையை எண்ணும் குழுவினர்

நிரந்தர உண்டியலில் ஒரு கோடியே 25 லட்சத்து 48 ஆயிரத்து 321 ரூபாயும், மேலகோபுர திருப்பணி உண்டியலில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 538 ரூபாயும் அடங்கும். மேலும், தங்கம் 780 கிராம், வெள்ளி 16 ஆயிரத்து 700 கிராம், வெளிநாட்டு ரூபாய் 252 தாள்களும் காணிக்கையாக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வாகனஓட்டிகளிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல முகமூடி கொள்ளையன் கைது

ABOUT THE AUTHOR

...view details