தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த தேர்தலில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்து, மக்களை ஊழல்படுத்தியுள்ளனர். வாக்காளர்களுக்கு அதிமுக, திமுக தரப்பில் 500, 1000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 4 ஆம் தேதி வரை என்னை புன்முறுவலோடு வரவேற்ற மக்கள், பணப்பட்டுவாடா செய்யப்பட்ட பின் முக பாவனையையே மாற்றி விட்டனர். ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது. பணம் பட்டுவாடா நடந்ததற்கு தேர்தல் ஆணையமே உடந்தையாக செயல்பட்டுள்ளது.
வாக்கு எண்ணக்கூடாது; 2 ஆண்டுகள் கழித்து மறு தேர்தல் - கிருஷ்ணசாமி - கிருஷ்ணசாமி
தூத்துக்குடி: தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
krishnasamy
எனவே, இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் தொடங்கக்கூடாது. 9 பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவை அமைத்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது குறித்து ஆய்வு செய்து, இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்னர் மறு தேர்தல் நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு!
Last Updated : Apr 7, 2021, 2:15 PM IST