தூத்துக்குடி: துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆணையம் சார்பாகத் தமிழக அரசுக்குப் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதில்,“தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும், தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து துப்பாக்கிச் சூட்டில் பலியான ஸ்னோலின் தாயார் வனிதா கூறுகையில்,”நியாயம் கிடைக்கும் எனப் போன இடத்தில் எங்களது உயிரைக் கொடுத்தது தான் மிச்சம். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் எத்தனையோ பேர் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர் அவர்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும்.