தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா பாதித்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்!

தூத்துக்குடி: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. உரிய சிகிச்சைக்கு பிறகு குழந்தைகள் தாயிடம் ஒப்படைக்கப்பட்டன.

கரோனா பாதித்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்  உரிய சிகிச்சைக்கு பிறகு குழந்தைகள் தாயிடம் ஒப்படைக்கப்பட்டன.
கரோனா பாதித்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் உரிய சிகிச்சைக்கு பிறகு குழந்தைகள் தாயிடம் ஒப்படைக்கப்பட்டன.

By

Published : Jun 15, 2021, 4:55 PM IST

Updated : Jun 15, 2021, 5:14 PM IST

தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த ஜஸ்டின்-வித்யா தம்பதியினருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன.

முன்னதாக, கடந்த 28ஆம் தேதி காய்ச்சல் அறிகுறிகளுடன் கர்ப்பிணி வித்யா (25), தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது.

மேலும் காரேனா‌ தொற்றால் வித்யாவுக்கு கல்லீரலில் பாதிப்பு உண்டானதும், மிக ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, 30ஆம் தேதி உடனடியாக அறுவைசிகிச்சை மூலம் வித்யாவுக்கு பிரசவம் நடைபெற்றது.

இதில் அவருக்கு பிறந்த மூன்று குழந்தைகளும் எடை குறைவாக ஆரோக்கியத்தன்மையற்று காணப்பட்டதால் மூன்று குழந்தைகளையும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிசு தீவிர கவனிப்பு பிரிவில் வைத்து மூச்சுத்திணறல் மற்றும் குறைமாத தன்மைக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

7 நாள்கள் தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்த குழந்தைகள் நலம் பெற்றதை தொடர்ந்து, மூன்று குழந்தைகளும் 15 நாள்களுக்குப் பிறகு வித்யாவிடம் இன்று (ஜூன் 15) ஒப்படைக்கப்பட்டன.

அப்போது, கரோனா தொற்றிலிருந்து மீண்ட வித்யா, தன் குழந்தைகளை வாஞ்சையோடு வாரி அணைத்துக்கொண்டார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தின்போது மருத்துவக்கல்லூரி முதல்வர் நேரு, உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி மற்றும் மருத்துவக்குழுவினர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது!

Last Updated : Jun 15, 2021, 5:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details