தூத்துக்குடி சவேரியர்புரம் ஹவசிங்போர்டு காலனியை சேர்ந்தவர் ஜோஸ்வா(21). இவர் தனது நண்பர்களுடன் குளிப்பதற்கு அப்பகுதியிலுள்ள மாப்பிள்ளையூரணி குளத்திற்கு சென்றுள்ளார்.
நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் மரணம் - Youth drowns in pool in Thoothukudi
தூத்துக்குடி: நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

சவேரியர்புரத்தைச் சேர்ந்த இளைஞர் குளத்தில் மூழ்கி பலி
ஆனால் குளித்துவிட்டு குளத்தில் இருந்து வெளியேறிய போது ஜோஸ்வாவை காணாததால் உடன் வந்தவர்கள் தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ஜோஸ்வாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.