இந்திய மனநல மருத்துவர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மனநல மருத்துவர்களுக்கான கருத்தரங்கு தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த, இந்திய மனநல மருத்துவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சபிதா, ”இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் அதிகரித்துள்ள மனநல பிரச்சனைகள் என்பது, வளர்ந்துவிட்ட தகவல் தொழில்நுட்பத்தினால் ஏற்படுகிறது எனக் கூறலாம்.
குறிப்பாக இணையத்தில் அதிகமாக நேரம் செலவிடுதல், பெற்றோர் கண்பார்வையில் இருப்பதனால் ஏற்படும் அழுத்தம், படிப்பு ரீதியாக ஏற்படும் மன அழுத்தம் ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இச்சூழ்நிலையில் உள்ள அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.