தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசு பேருந்திலிருந்து உடைந்து விழுந்த ஸ்டீரிங் பாக்ஸ் - பயணிகள் அச்சம் - Government

கோவில்பட்டியில் அரசுப் பேருந்திலிருந்து ஸ்டீரிங் பாக்ஸ் உடைந்து விழுந்து, சாலையின் நடுவே பேருந்து நின்றதால் போக்கவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கோவில்பட்டியில் அரசு பேருந்திலிருந்து உடைந்து விழுந்த ஸ்டீயரிங் பாக்ஸ்
கோவில்பட்டியில் அரசு பேருந்திலிருந்து உடைந்து விழுந்த ஸ்டீயரிங் பாக்ஸ்

By

Published : Oct 10, 2022, 8:33 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து சிவஞானபுரத்திற்கு அரசுப் பேருந்து ஒன்று இன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பியது. பேருந்து கோவில்பட்டி மாதங்கோவில் சாலை மெயின் ரோடு சந்திப்பு பகுதியில் சென்ற போது அரசு பேருந்தின் ஸ்டீரிங் பாக்ஸ் திடீரென உடைந்து கீழே விழுந்தது.

இதனால் பேருந்து நிலைதடுமாறி அருகில் உள்ள குறுகிய பாலத்தில் நடுவில் நின்றது. அரசுப் பேருந்து சாலையின் நடுவே நின்றதால் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து காவலர்கள் விரைந்து வந்து போக்குவரத்தினை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.

கோவில்பட்டியில் அரசு பேருந்திலிருந்து உடைந்து விழுந்த ஸ்டீயரிங் பாக்ஸ்

இதனைத் தொடர்ந்து கோவில்பட்டி அரசுப் போக்குவரத்து பணிமனை ஊழியர்கள் வந்து அரசு பேருந்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக சரி செய்ய முடியவில்லை என்பதால் மாற்று பேருந்து மூலமாக பழுதான பேருந்தினை இழுக்க முயற்சி மேற்கொண்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:ஆசிரியர் தகுதித் தேர்வு - 39 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details