தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை நெல்லை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக பின்னடைவை சந்தித்திருந்தாலும், கட்சி உறுப்பினர் சேர்க்கையில் அதிகமானோர் சேர்ந்து வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
'ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததற்கு ஸ்டாலின் வெட்கப்படணும்' - rahul gandhi
தூத்துக்குடி: ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததற்கு ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து 50 நாட்களில் செய்த சாதனைகள், நிறைவேற்றிய திட்டங்கள், இயற்றிய சட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிக்கை தாக்கல் செய்ததை குறிப்பிட்ட அவர், ஆனால் தமிழ்நாடில் காங்கிரஸ் கட்சியில் ஒரு நிர்வாகியை கூட போட முடியாத சூழ்நிலை உள்ளதாக விமர்சித்தார்.
தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ராகுல் காந்தி தற்போது காங்கிரஸ் கட்சியை நிர்வாகிக்க முடியாமல் லண்டனில் போய் ஒளிந்துள்ளாக கிண்டலாக தெரிவித்த தமிழிசை, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் எனத் தாக்கிப் பேசினார்.