தூத்துக்குடி: கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் 10.50 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவமனையை முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து காலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை நெல்லையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின்னர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், உள்ள திட்டங்குளம் தீப்பெட்டி தொழிற்சாலையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின், கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில், 10.50 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அரசு மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடத்தை திறந்து வைத்த ஸ்டாலின் இதில், நவீன வசதிகளுடன் மருத்துவர் அறை, பதிவறை, அவசர சிகிச்சை, நோயாளிகள் காத்திருக்கும் அறை, மருந்தகம், முதல் தளத்தில், 44 படுகைக்களுடன் ஒரு அறுவை சிகிச்சை அறை, இரண்டாம் தளத்தில், 44 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சை பிரிவுடன் 2 அறுவை சிகிச்சை அறை அமைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மனோ தங்கராஜ், தங்கம் தென்னரசு, ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், கே.என் நேரு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் அணைகளைக்கட்ட சாத்தியக்கூறுகள் இல்லை: அமைச்சர் துரைமுருகன்