தூத்துக்குடி:மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதன்படி, விளாத்திக்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில், சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேம்பார் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் பொன்பாரத் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த டிராக்டரில் மணல் கடத்தியது கண்டறியப்பட்டது.
உடனடியாக, டிராக்டர் ஓட்டுநரான கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணனை (57) கைது செய்து விசாரணை மேற்காண்டனர். விசாரணயில், டிராக்டர் உரிமையாளரான வேம்பார் சிந்தாமணி நகரைச் சேர்ந்த முத்தழகு(59) என்பவர் மணல் திருடச் சொன்னது தெரியவந்தது.