தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

2ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு: பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முகாம்! - Voter ID Verification camp tamilnadu

தமிழ்நாடு முழுவதும் இரணடாம் கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றுவருகிறது.

second-phase-voter-list-verification-camp-across-tamil-nadu
second-phase-voter-list-verification-camp-across-tamil-nadu

By

Published : Dec 13, 2020, 8:09 PM IST

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்காளர் சரிபார்ப்பு முகாம் தமிழ்நாட்டில் நவம்பர் மாதம் தொடங்கியது. முதல்கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடைபெற்றுவருகிறது.

அதன்படி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சனி, ஞாயிறுகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன. அதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், மகளிர் திட்ட மேலாண்மை இயக்குநரும், மாவட்ட வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பார்வையாளருமான ஜோதி நிர்மலாசாமி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கீதாஜீவன், சண்முகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய ஜோதி நிர்மலாசாமி புதிய வாக்காளர்களை இணைக்கும் வகையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,379 மையங்களில் முகாம் நடைபெற்று வருகிறது. அதில், பெருநகராட்சிக்குட்பட்ட பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமை மாவட்ட மகேஸ்வரி ரவிக்குமார் இன்று (டிசம்பர் 13) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இன்று வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில்,
வாக்களிப்பது நமது கடமை என்பதை வலியுறுத்தி கையெழுத்திடும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில், இயக்கம் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க:வாக்காளர் சிறப்பு முகாமில் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மனு!

ABOUT THE AUTHOR

...view details