தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நடுக்கடலில் மூழ்கிய மீனவர்கள்; தேடும் பணியைத்தீவிரப்படுத்திய தூத்துக்குடி ஆட்சியர்! - நடுக்கடலில் மூழ்கிய மீனவர்கள்

திருச்செந்தூர் அருகே நடுக்கடலில் காணாமல் போன இரண்டு மீனவர்களைத்தேடும் பணியில் இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மற்றும் ரோந்துப்படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நடுக்கடலில் மூழ்கிய மீனவர்கள்; தேடும் பணி தீவிரப்படுத்திய ஆட்சியர்
நடுக்கடலில் மூழ்கிய மீனவர்கள்; தேடும் பணி தீவிரப்படுத்திய ஆட்சியர்

By

Published : Aug 2, 2022, 7:32 PM IST

தூத்துக்குடி:திருச்செந்தூர் அமலி நகர் பகுதியைச்சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் நேற்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். மீன்பிடித்து விட்டுத்திரும்பி வரும்போது கடலில் காற்றின் வேகம் அதிகரித்து, அதன் காரணமாக படகு கவிழ்ந்துள்ளது. திருச்செந்தூரில் இருந்து சுமார் 22 கடல் மைல் தொலைவில் இந்தப் படகு கவிழ்ந்துள்ளது.

படகில் இருந்த ஐஸ் பெட்டியைப் பிடித்தவாறு இரண்டு மீனவர்கள் மிதந்து உயிர் பிழைத்துள்ளனர். இந்தப்படகில் சென்ற படகின் உரிமையாளர் அஸ்வின், மற்றொரு மீனவர் பிரசாத் ஆகிய இரண்டு பேர் கடலில் மூழ்கி விட்டனர்.

இவர்களைத்தேடும்பணியில் நேற்று முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று காலை முதல் மீன்வளத்துறை மூலமாக இரண்டு விசைப்படகுகள் மற்றும் 10 பைபர் படகு மூலமாகத்தேடும் பணி நடைபெற்றது.

அதில் மீனவர்கள் மீட்கப்படாத நிலையில் இந்திய கடலோர காவல் படைக்குச்சொந்தமான ஆதேஷ், அதிராஜ் ஆகிய இரண்டு ரோந்துக் கப்பல்கள் மூலமாகவும், இந்திய விமானப்படைக்குச்சொந்தமான ஹெலிகாப்டர் மூலமாகவும் தேடும்படிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரின் முயற்சியால் ஒரு ஏர்கிராப்ட் மூலமாகவும் இந்த மீனவர்களைத்தேடும் பணி நடைபெற்று வருகிறது.

நடுக்கடலில் மூழ்கிய மீனவர்கள்; தேடும் பணியைத்தீவிரப்படுத்திய தூத்துக்குடி ஆட்சியர்!

இதையும் படிங்க:காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் யானை; மீட்புப்பணிகள் தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details