தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாத்தான்குளம் லாக்கப் கொலை: ஆவணங்கள் இன்று சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும்! - சாத்தான்குளம் படுகொலை

தூத்துக்குடி: சாத்தான்குளம் வணிகர்களான தந்தை-மகன் கொலை வழக்கு ஆவணங்கள் இன்று மாலை மத்திய புலனாய்வு பிரிவு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று சிபிசிஐடி காவல் துறை கூறியுள்ளது.

sathankulam case
sathankulam case

By

Published : Jul 10, 2020, 3:52 PM IST

சாத்தான்குளம் தந்தை-மகன் இறந்த வழக்கில் சிபிசிஐடி அலுவலர்கள் விசாரணை நடத்தி 10 பேரை கைது செய்துள்ளனர். தற்பொழுது இந்த வழக்கை தேசிய புலனாய்வுப் பிரிவினர் (சிபிஐ) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளனர்.

சாத்தான்குளம் விவகாரம்: புதிதாக வழக்குகளைப் பதிவு செய்த சிபிஐ!

இது தொடர்பாக சிபிஐ அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து அறிக்கையினை வெளியிட்டுள்ளனர். இச்சூழலில் சிபிஐ அலுவலர்கள் இன்று தூத்துக்குடியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக்கொள்வார்கள் எனத் தெரிகிறது.

சிபிசிஐடி காவல் பிரிவின் தலைவர் சங்கர் பேட்டி

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக நேற்று வரை சிபிசிஐடி விசாரித்து வந்ததாக அக்காவல் பிரிவின் தலைவர் சங்கர் தெரிவித்துள்ளார். மேலும் காவல் நிலையம், ஜெயராஜ் கடை உள்ளிட்ட இடங்களில் நடத்திய விசாரணையின் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் இன்று மத்திய புலனாய்வு பிரிவிடம் தரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details