தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சாத்தான்குளம் லாக்கப் மரணம்: மேலும் 5 காவலர்கள் கைது - சிபிசிஐடி அதிரடி - ஜெயராஜ்

சாத்தான்குளம் தந்தை-மகன் லாக்கப் மரணம் தொடர்பாக மேலும் ஐந்து காவலர்களை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

சாத்தான்குளம் லாக்கப் மரணம்
சாத்தான்குளம் லாக்கப் மரணம்

By

Published : Jul 8, 2020, 4:41 PM IST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரைக் காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கினார்கள். இதில் காயமடைந்த இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி. காவல் துறையினர் விசாரணை நடத்தி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோரைக் கைதுசெய்திருந்தனர்.

சாத்தான்குளம் கொலை வழக்கு - காவலர்கள் பத்து பேரிடம் சிபிசிஐடி விசாரணை

இச்சூழலில், ஏற்கனவே விசாரிக்கப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, சம்பவத்தின்போது பணியிலிருந்த காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ், வெயிலுமுத்து ஆகிய ஐந்து பேரையும் சிபிசிஐடி காவல் துறையினர் இன்று கைதுசெய்தனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு, நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details