தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சமக தலைவராக சரத்குமார் மீண்டும் தேர்வு! - சரத்குமார்

தூத்துக்குடி: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் சரத்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

smk
smk

By

Published : Mar 3, 2021, 12:30 PM IST

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6 ஆவது பொதுக்குழு கூட்டம், தூத்துக்குடி திரவியபுரத்தில் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தின் முதல் நிகழ்வாக கட்சியின் அமைப்பு தேர்தல் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளராக சரத்குமார் மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். புதிதாக கட்சியில் தோற்றுவிக்கப்பட்ட முதன்மை துணைப் பொதுச்செயலாளராக ராதிகா சரத்குமார் தேர்வு செய்யப்பட்டார். பொருளாராக சுந்தரேசன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் முதன்மை துணைப் பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார், குத்து விளக்கேற்றி 6 ஆவது பொதுக்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தின் இறுதியில் சரத்குமார் சிறப்புரையாற்றுகிறார். இதில் தேர்தல் கூட்டணி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமக தலைவராக சரத்குமார் மீண்டும் தேர்வு!

இதையும் படிங்க:'ராகுல் இளம் தலைவர்; பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்' - குஷ்பூவின் குசும்பு

ABOUT THE AUTHOR

...view details