தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உள்ளாட்சி அமைப்புகளில் 3537 பதவிகளுக்கு தேர்தல் - சந்தீப் நந்தூரி - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி: ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி அமைப்புகளில் 3537 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது என தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

By

Published : Dec 4, 2019, 2:24 PM IST

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கானப் பயிற்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பயிற்சியை தொடங்கி வைத்து பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

அப்போது, “தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இம்மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட தேர்தல் தூத்துக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்தல் கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும்.

முதலமைச்சர் பதவிக்காக எடப்பாடி தவழ்ந்தது அனைவருக்கும் தெரியும் - டிடிவி சாடல்

முதற்கட்டமாக டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறும் தேர்தலில், 1542 பதவிகளுக்கு, 640 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும். இதில் வாக்களிக்க 4லட்சத்து ஆயிரத்து 466 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இரண்டாம் கட்டமாக 30ஆம் தேதி நடைபெறும் தேர்தலில், 1995 பதவிகளுக்கு 1178 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறும். இதில் 4லட்சத்து 691 வாக்காளர்கள் வாக்களர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மறைமுக மேயர் தேர்தல்: மாமியாருக்கு ஒரு சட்டம்? மருமகளுக்கு ஒரு சட்டமா? - திமுகவுக்கு ஜெயக்குமார் கேள்வி

மாவட்டத்திலுள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில், முதற்கட்டத்தில் 7 ஊராட்சி ஒன்றியங்களில் 824 வாக்குப்பதிவு மையங்களிலும், இரண்டாவது கட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களில், 994 வாக்குப்பதிவு மையங்களிலும் வாக்குப்பதிவு நடத்தப்படும். இதில் 540 வாக்குப்பதிவு மையங்கள் பதட்டமான வாக்குப்பதிவு மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி பேட்டி

இந்த மையங்களில் மைக்ரோ அப்சர்வர்கள் பயன்படுத்தப்படவுள்ளனர். ஊரக பகுதிகளில் நடைபெறும் இந்த தேர்தல் பணியில் 14ஆயிரத்து 880 அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்” என்றார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details