தூத்துக்குடி:கடந்த மாதங்களில் பெய்த கனமழையின் காரணமாக மாநகராட்சி பகுதியில் பல சாலைகள் சேதம் அடைந்தன. இதைத் தொடர்ந்து, சேதமடைந்த சாலைகள் அனைத்தும் தற்போது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் மடத்தூர் பசும்பொன் நகர் ராஜகோபால் நகர், பால்பாண்டி நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.