தூத்துக்குடி: கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், மருத்துவமனையில் ஆண்கள், பெண்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ள வார்டுகளில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைகாக வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் வார்டுகளில் உள்ள கழிவறைக்கு கதவுகள் இல்லாததால், நோயாளிகள் மற்றும் அவரது பராமரிப்பிற்காக உடனிருப்பவர்கள் வரை பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருவதாக வேதனைத் தெரிவிக்கின்றனர்.
பலமுறை இதுகுறித்து புகார் தெரிவித்தும் மருத்துவமனை நிர்வாகத்தினர் மாறாக பொதுப்பணித்துறையினரை குறைகூறி கை காட்டுவதாகக்கூறப்படுகிறது. குறிப்பாக, ஆண்கள் வார்டில் சிகிச்சை பெறுபவர்களை கவனிக்க உடன் இருக்கும் பெண்கள், இதனால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் கழிவறையில் கதவுகள் அமைக்கக் கோரிக்கை எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு கழிவறைகளுக்கு முறையாக கதவுகள் அமைக்கவேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லை அரசு மருத்துவமனையில் ரத்தப்பரிசோதனை முடிவுகள் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன - டீன் ரவிச்சந்திரன்