தமிழர் திருநாளாம் பொங்கல் விழா நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் கரும்பு, மஞ்சள் இஞ்சி கொத்து, பொங்கல் பானை, வெல்லம், அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்க, கோவில்பட்டி மெயின் பஜார், மார்க்கெட் ரோடு, கிருஷ்ணன் கோவில் தெரு சத்திரம், கீழரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. மந்தித்தோப்பு பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட மஞ்சள் குலைகள் கொண்டு வரப்பட்டு, ஒரு ஜோடி 20 முதல் 40 ரூபாய் வரை தரம் பிரிக்கப்பட்டு விற்பனையாகிறது.
பொங்கலை முன்னிட்டு பானை, கரும்பு விற்பனை ஜோர்! - மஞ்சள்
தூத்துக்குடி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டியில் பொங்கல் பானை, கரும்பு, கலர் கோலப்பொடிகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் உள்ளிட்டப் பகுதிகளில் தயாரிக்கப்பட்ட குத்து விளக்குகள், வெங்கலப் பானைகள், பொங்கல் பானைகள் ஆகியவற்றை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். வண்ணக் கோலப்பொடிகள் விற்பனையும் களைகட்டியுள்ளது. கரோனா ஊரடங்குக்கு பின்பு மெல்ல இயல்பு நிலை திரும்பியுள்ள சூழலில், பொங்கல் பண்டிகையை பாரம்பரியத்துடன் கோலாகலமாகக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். கரும்புக் கட்டுகளும் லாரிகளில் கொண்டு வரப்பட்டு கோவில்பட்டி நகரமெங்கும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
இதையும் படிங்க: உள்ளம் துள்ளும் சேலம் வெல்லம்! உச்சத்தில் விற்பனை!