தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'பொய் வாக்குறுதிகளால் வெற்றி பெற்றார் பொன்னார்' - ஹெச். வசந்தகுமார்! - வசந்த்குமார்

தூத்துக்குடி: பொய் வாக்குறுதிகளைக் கூறி கடந்தமுறை பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹெச். வசந்தகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

வசந்த்குமார்

By

Published : Mar 24, 2019, 11:38 PM IST


கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் இன்று தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவருக்கு தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் மற்றும் வர்த்தக காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் வசந்தகுமார் கூறுகையில்,

"கன்னியாகுமரி தொகுதியில் ரூ. 40 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பொன்னார் கூறுகிறார். என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது என்பதை கூற முடியுமா?. 2 பாலங்கள் கட்டியதைதவிர வேறு திட்டங்கள் செயல்படுத்தியதாக தெரியவில்லை.

கடந்த முறை பொய் வாக்குறுதிகளை கூறி பொன்னார் வெற்றி பெற்றார். குமரி தொகுதியில் இந்தமுறை நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன். தேர்தல் பரப்புரைக்கு பிரியங்கா, திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி, நடிகை குஷ்பூ உள்ளிட்டோர் வர உள்ளனர். தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்காக பரப்புரையில் ஈடுபடுவேன்", என்றார்.

ABOUT THE AUTHOR

...view details