தூத்துக்குடி: 2004ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 26) இந்தோனேஷிய கடற்பரப்பில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் சுனாமி உருவானது. அதன் தாக்கத்தால், பல்வேறு நாடுகளின் கடலோரப் பகுதிகளை ஆழிப்பேரலை அழித்துச் சென்றது.
இதில், தமிழ்நாட்டில் ஏராளமான உயிர்சேதமும், பொருள்சேதமும் ஏற்பட்டது. அந்த தீரா வடுக்களை நினைவுக் கூறும் 17ஆம் ஆண்டு நினைவுத் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
திரேஸ்புரம் கடற்கரையில் சுனாமி நினைவு தினத்தை அனுசரிக்கும் பொதுமக்கள் இதையொட்டி, தூத்துக்குடியில் உள்ள நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. திரேஸ்புரம் கடற்கரையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், ஆழிப்பேரலையில் இறந்தவர்களுக்கு மீனவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
திரேஸ்புரம் கடற்கரையில் சுனாமி நினைவு தினத்தை அனுசரிக்கும் பொதுமக்கள் கடலுக்குச் செல்லாத மீனவர்கள்
17ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் தொடர்ந்து, இனிமேல் இப்படி ஒரு பேரழிவை இயற்கை தந்து விடக்கூடாது என வேண்டி கடல் தாய்க்கு மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.
அப்போது பேசிய மீனவர் இசக்கிமுத்து, "சுனாமி பேரழிவின் போது ஏராளமான உயிர்சேதமும், படகுகளும் சேதம் அடைந்தன. அந்த பேரிழிப்பு நடந்து 17 ஆண்டுகள் நிறைவடைகிறது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒருநாள் நாட்டுப்படகு,விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை" என்றார்.
இதையும் படிங்க: ஒட்டப்பிடாரம் அருகே ரசாயன கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு?