ஒரு நிலையம் ஒரு பொருள் திட்டத்தின்கீழ், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் புவிசார் குறியீடு பெற்ற கடலைமிட்டாய் விற்பனை நிலையம் தொடங்கப்பட்டது. மதுரை ரயில்வே கோட்டத்தில் 'ஒரு நிலையம் ஒரு பொருள்' விற்பனைத்திட்டத்தின்கீழ் மதுரை, நெல்லை போன்ற ரயில் நிலையங்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள பிரதானப் பொருட்கள் விற்பனை செய்யத் திட்டம் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டத்திற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இத்திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள 30 ரயில்வே நிலையங்களில் அந்தந்த பகுதியில் உள்ள பிரதானப்பொருட்களை விற்பதற்கு விருப்பம் கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் எந்த கட்டணமும் செலுத்தாமல் 15 நாட்கள் அந்தந்த ஊர்களின் பிரதானப்பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டது.