தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஓடும்பேருந்தின் கண்ணாடியில் மோதி பரிதாபமாக உயிரிழந்த மயில் - government

கோவில்பட்டி அருகே அரசுப்பேருந்து கண்ணாடி மீது மோதி மயில் உயிரிழந்தது. ஓட்டுநர் சாதூர்த்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ஓடும் பேருந்தின் கண்ணாடியில் மோதி பரிதாபமாக உயிரிழந்த மயில்
ஓடும் பேருந்தின் கண்ணாடியில் மோதி பரிதாபமாக உயிரிழந்த மயில்

By

Published : Sep 9, 2022, 6:09 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டியிலிருந்து விளாத்திகுளம் நோக்கி, எட்டையபுரம் சாலையில் அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. இதில், சங்கரன்கோவில் பகுதியைச்சேர்ந்த ஓட்டுநர் கருப்பசாமி, விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த நடத்துநர் பாலமுருகன் மற்றும் 80-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

இந்நிலையில் படர்ந்தபுளி அருகே சென்று கொண்டிருந்தபோது காட்டுப்பகுதியில் திடீரென குறுக்கே வந்த மயில் அரசுப் பேருந்து முன் பக்க கண்ணாடி மீது மோதியதில், முன்பக்க கண்ணாடி உடைந்து சுக்கு நூறானது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் சுதாரித்துக்கொண்டு பிரேக் அடித்து பேருந்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஓட்டுநர் மற்றும் பயணிகள் கீழே இறங்கி வந்து பார்த்தபோது, பேருந்து கண்ணாடியின் மீது மயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே, மயில் துடிதுடித்து உயிரிழந்தது.

ஓடும்பேருந்தின் கண்ணாடியில் மோதி பரிதாபமாக உயிரிழந்த மயில்

இந்த விபத்தில் ஓட்டுநர் உட்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து வனத்துறை அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, பேருந்தில் இருந்த பயணிகள் அதே பேருந்தில் பத்திரமாக விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர்.

இதையும் படிங்க:கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து மாயமான மயில் சிலையின் அலகில் இருந்தது மலரா? பாம்பா?

ABOUT THE AUTHOR

...view details