ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்னும் மத்திய அரசின் திட்டத்தின் மூலம் நாட்டின் எந்தப் பகுதியில் உள்ளவர்களும் எங்கும் ரேஷன் பொருள்களைப் பெற முடியும். இந்தத் திட்டம் ஜூன் 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ளதாக மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்திருந்தார்.
'ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை' திட்டத்துக்கான அரசாணை வெளியீடு
சென்னை: ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் தமிழ்நாட்டில் சோதனை முறையில் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இரு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதையடுத்து இந்தத் திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் தமிழ்நாட்டில் உள்ள எந்த நியாயவிலைக்கடைகளிலும் பொருள்களை பெற்றுக்கொள்ள முடியும். தற்போது இந்தத் திட்டம் முதற்கட்டமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்துகிறது.
இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. மேற்கொண்ட இரு மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த, நுகர்வோர் பணிகள் கூடுதல் பதிவாளர் அந்தோணிசாமி ஜான் பீட்டர், தூத்துக்குடி, திருநெல்வேலி மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பபட்டது.