தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

“நாங்கள் பழிவாங்க நினைத்தால் திமுகவினர் ஒருவர் கூட வெளியே இருக்க முடியாது” - கடம்பூர் ராஜூ - கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி : திமுகவினரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் செயல்பட்டால் அக்கட்சியில் ஒருவர் கூட வெளியே இருக்க முடியாது என தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Not a single DMK Cadre can be out if we act with the intention of revenge
தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ

By

Published : Dec 10, 2020, 10:20 PM IST

மூதறிஞர் ராஜாஜியின் 142ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ராஜாஜியின் உருவச்சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுகவினர் அனைவரின் மீதும் வழக்கு பதியப்படும். முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அச்சுறுத்துகிறார்.

திமுக தலைவரைப் போல நாங்களும் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டால் அக்கட்சியில் ஒருவர் கூட வெளியே இருக்க முடியாது என சொல்ல விரும்புகிறேன். நாங்கள் அவர்களைப் போல சிந்திக்க மாட்டோம். எங்கள் அரசு மக்களின் நலனை மட்டுமே பிரதானமாக கொண்டு இயங்கி வருகிறது. கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து போன்ற நடவடிக்கைகளை ஒழித்திருக்கிறோம்.

திரைத்துறையை பொறுத்தவரை புதிய சங்கங்களைத் தோற்றுவிப்பதற்கு, அத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு முழு உரிமை உண்டு. நடிகர் சங்கமாக இருந்தாலும் சரி, தயாரிப்பாளர் சங்கமாக இருந்தாலும் சரி தேர்தல் மூலம் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் சங்கமே அங்கீகாரம் பெற்ற சங்கமாக கருதப்படும். திரைத்துறையினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு. அனைவரும் இணைந்து செயல்பட்டால் நல்லது.

தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ

எட்டுவழி சாலையை பொறுத்தவரை விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அரசால் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பின்படி (கைடு லைன் வேல்யூ) பணம் தரப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டம் வந்தால் போக்குவரத்து விரிவடையும். தமிழ்நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். வியாபாரங்கள், வணிக நிறுவனங்கள் பெருகும். இதை சிலர் அரசியலுக்காக எதிர்க்கின்றனர்” என்றார்.

இதையும் படிங்க :தமிழ்நாட்டில் 12 ஆயிரத்தை நெருங்கும் கரோனா உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details