தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ஆம் தேதி மாநில அரசு சார்பில், முதற்கட்டமாக அகழாய்வுப் பணி தொடங்கியது.
ஆதிச்சநல்லூர்: அகழாய்வில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
தூத்துக்குடி: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டு முதுமக்கள் தாழிகள், இரண்டு கை எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Adichchanallur Excavation
இதன்காரணமாக ஆதிச்சநல்லூரில் நான்கு குழிகள் அமைத்து அகழாய்வுப் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆதிச்சநல்லூரில் நேற்று(ஜூன் 9) அகழாய்வுப் பணியில், 3000 ஆண்டுகள் பழமையான இரண்டு முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் அதன் அருகே இரண்டு கை மூட்டு எலும்புகளும் காணப்படுகிறது. ஆதிச்சநல்லூரில் நடைபெறும் அகழாய்வில், முதுமக்கள் தாழிகள் கிடைத்தது, ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.