தூத்துக்குடி: வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கொலை, கொள்ளை குற்றங்கள் அதிகரித்து வருகிறது.
இது மிகுந்த வேதனையளிக்கிறது. கொலை எண்ணிக்கையை காவல் துறை உயர் அதிகாரிகள் வெளியே குறைத்து சொல்கிறார்கள். அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே கொலை, கொள்ளை குற்றங்களை குறைக்க முடியும் என தெரிவித்தார். மேலும், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை சமர்பித்துள்ளார்.