தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தெலங்கானா ஆட்சியரை வசைபாடிய சீதாராமன்... வருத்தமளிப்பதாக எம்பி கார்த்திக் சிதம்பரம் தகவல் - Control of CISF

தெலங்கானா மாநிலத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வசைபாடியது வருத்தமளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சிதம்பரம் எம்பி
கார்த்திக் சிதம்பரம் எம்பி

By

Published : Sep 4, 2022, 6:11 PM IST

தூத்துக்குடி:தமிழ்நாட்டில் வரும் செப்.7ஆம் தேதி ராகுல் காந்தி நடைபயண பரப்புரை மேற்கொள்ளவுள்ள நிலையில் இன்று (செப்.4) கார்த்திக் சிதம்பரம் எம்பி, காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி நேரடியாக மக்களை சந்திப்பது நல்ல விஷயம். இது கட்சிக்கு வலு சேர்க்கும். நடைபாதை செல்லும் வழியெல்லாம் கட்சியினர் ஒன்று திரண்டு வந்தாலே பலம் ஆகும். அதே வேளையில் பொதுமக்களை நேரடியாக சந்திப்பதில் கட்சியோட தொண்டருக்கும் தலைமைக்கும் ஒரு வாய்ப்பு மக்களின் நிலைபாட்டை கட்சி புரிந்துகொள்ள முடியும். எங்களுடைய நிலைப்பாட்டின் மக்களுக்கு எடுத்து சொல்ல முடியும்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் நடைபயணம்:பாஜக ஆட்சியில் மக்களுக்கு என்னென்ன பாதிப்புகள் நாட்டு மக்களுக்கு வந்திருக்கிறது என்பது எடுத்துச் சொல்வதற்கு இது ஒரு வாய்ப்புதான். நடைபயண பிரச்சாரம் காங்கிரஸ் கட்சிக்குள்ளே போட்டி இருந்தாலும், கட்சி ஒற்றுமையா தான் இருக்கிறது. எந்த வகையிலும் கட்சி பிரிந்து இல்லை. தமிழ்நாட்டைப் பொருத்தவரைக்கும் ஒற்றுமையாக காங்கிரஸ் தமிழ்நாட்டில் நடைபெறும் நடை பயணத்தை வெற்றிகரமாக நடத்தி முடிப்பர்.

நிதியமைச்சரின் செயல் வருத்தமளிக்கிறது: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தகுதி வாய்ந்த நபர்கள் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அதுக்கு வாக்களிக்க விருப்பம் உள்ளவர்கள், வாக்களிப்பார்கள். தெலுங்கானா மாநிலத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாவட்ட ஆட்சியரை வசைபாடியது செய்தியாளர்கள் கேட்டதற்கு, மோடி என்னமோ சொந்த பணத்தில் அரிசி வழங்குவதுபோல் பேசி உள்ளார். இது மக்களின் வரிப்பணம் ஒரு நிதியமைச்சர் நடந்து கொள்வதுபோல் நடந்து கொள்ளவில்லை அவரது செயல் வருத்தம் அளிக்கிறது என்றார்.

அரசியலுக்காக பேசக்கூடாது அண்ணாமலை:போதைப்பொருள் தமிழகத்தில் உற்பத்தியாவது என்று யாரும் சொல்வது கிடையாது; விநியோகம் செய்யப்படலாம். ஆனால், இது வெளிநாட்டிலிருந்து துறைமுகம் வழியாக அதாவது அதானியின் கட்டுப்பாட்டில் இருக்கும் முந்த்ரா துறைமுகம் வழியாக வருகிறது. எல்லா துறைமுகத்திலும் சிஐஏஸ்எப் கட்டுப்பாடு இருக்கின்றன. ஆனால், முந்த்ரா துறைமுகத்தில் மட்டும் சிஐஏஸ்எப் கட்டுப்பாடு இல்லை.. ஏன்? இதனை ஒழுங்காக தெரிந்து விட்டு அண்ணாமலை பதில் சொல்ல வேண்டுமே, தவிர அரசியலுக்காக பேசக்கூடாது' என கூறினார்.

கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திக் சிதம்பரம் எம்பி

இதையும் படிங்க: ஹைதராபாத் சுதந்திர தினமா..? தெலங்கானா ஒருமைப்பாட்டு தினமா..? பாஜக Vs கேசிஆர்...

ABOUT THE AUTHOR

...view details