தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

போலீஸ் போல் நடித்து வியாபாரி கடத்தல் - 5 லட்சம் பறித்த கொள்ளை கும்பல் கைது - பழைய இரும்பு வியாபாரம்

கோவில்பட்டியில் போலீஸ் போல் நடித்து வியாபாரியை காரில் கடத்திச்சென்று 5 லட்சம் ரூபாய் பறித்த 5 பேர் கொண்ட கொள்ளை கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

Etv Bharatபோலீஸ் போல் நடித்து வியாபரி கடத்தல் - 5 லட்சம் ரூபாய் பறித்த கொள்ளை கும்பல் கைது
Etv Bharatபோலீஸ் போல் நடித்து வியாபரி கடத்தல் - 5 லட்சம் ரூபாய் பறித்த கொள்ளை கும்பல் கைது

By

Published : Aug 8, 2022, 12:23 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி நடராஜபுரம் தெருவை சேர்ந்தவர் தங்கம் (63). இவர் இளையரசனேந்தல் சாலையில் பாத்திரக்கடை மற்றும் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். நேற்று(ஆகஸ்ட் 7) இவர் கடையில் இருந்த போது கார் ஒன்று வந்து நின்றுள்ளது. அதிலிருந்து இறங்கிய இருவர், சார் உங்களை வர சொல்கிறார் என தங்கத்திடம் கூறியுள்ளனர். அவர் கடையிலிருந்து இறங்கி கார் அருகில் சென்ற போது அவர்கள் இருவரும் சேர்ந்து தங்கத்தை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கொண்டு சென்றனர்.

காரில் ஓட்டுநர் உட்பட மொத்தம் 5 பேர் இருந்தனர். அவர்கள் தங்களை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த தனிப்பிரிவு போலீஸார் என அறிமுகப்படுத்திக் கொண்டு நீங்கள் சமீபத்தில் வாங்கிய செம்பு கம்பிகள் திருடப்பட்டவை. இந்த வழக்கில் உங்களை கைது செய்யாமல் இருக்க எங்களுக்கு ரூ.20 லட்சம் வேண்டும். இல்லையென்றால் உங்களை கைது செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

அப்போது தங்கம் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியடுத்து பணம் தொடர்பாக பேரம் பேசி உள்ளனர். இதையடுத்து ரூ.5 லட்சம் தருவதாக தங்கம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவர் தனது மகனை செல்போனில் அழைத்து விவரங்களை தெரிவித்து 5 லட்சம் கொண்டு வரும்படி கூறியுள்ளார். அவரது மகன் செந்தில் பணம் தயாராகிவிட்டது என தந்தையை தொடர்பு கொண்டு கூறியுள்ளார்.

அவர்களது கார் கரூர் மாவட்டத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. இதையடுத்து அவர்கள் மீண்டும் திரும்பி வந்தனர். விருதுநகர் மாவட்டம் கப்பலூர் அருகே ஒரு இடத்தில் நின்று கொண்டு செந்திலிடம் பணத்தை பெற்றுக் கொண்டு தங்கத்தை விடுவித்து விட்டு சென்றனர். தனது தந்தையை போலீஸ் எனக் கூறி சிலர் அழைத்து செல்வதை அறிந்த செந்தில் ஏற்கெனவே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து இருந்தார்.

போலீஸ் போல் நடித்து வியாபரி கடத்தல் - 5 லட்சம் ரூபாய் பறித்த கொள்ளை கும்பல் கைது

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் நேரடியாக தங்கத்தின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். உடனடியாக தங்கத்தை தங்களது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சாத்தூர் சுங்கச்சாவடி அடைந்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை சோதனையிட்டபோது, தான் சென்ற காரை தங்கம் அடையாளம் காட்டினார். அந்தக் காரின் பாஸ்டாக் கொண்டு போலீசார் பின் தொடர்ந்து சென்றனர்.

கரூர் சுங்கச்சாவடியை கடக்கும்போது அந்த காரின் எண் கர்நாடக மாநில பதிவு எண்ணாக மாற்றப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அரவக்குறிச்சியை அடுத்த வேளஞ்செட்டியூரில் உள்ள சுங்கச்சாவடியை அந்த கார் கடப்பதை அறிந்த போலீஸார் அதனை தடுக்க முயற்சி செய்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்று விட்டது.

இதையடுத்து கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸார் உஷார் படுத்தப்பட்டனர். கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே ஆட்டையாம்பரப்பு பகுதியில் சென்றபோது அங்கு இருந்த போலீஸார் காரை மடக்கி பிடித்தனர்.பிடிபட்ட கார் மற்றும் அதிலிருந்து 5 பேரை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது, பெங்களூரு ஐடிஐ காலனியைச் சேர்ந்த டேனியல் எசெக்ஸ்(50), பெரோஸ்கான்(47), கே.கே.அள்ளி பகுதியைச் சேர்ந்த பவுல்ராஜ்(33), ராஜ்குமார் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஏசு தாஸ் (34), மங்களூர் கபாப் பகுதியைச் சேர்ந்த பாரூன் (29) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், போலி வாக்கி டாக்கி மற்றும் 5 லட்சம் பணம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீஸார் அணியும் உடைகளும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இந்த கும்பல் தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘இந்த கடத்தல் வழக்கில் குற்றவாளிகளை துரித நடவடிக்கையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கும்பலுக்கு யார் யாருடன் தொடர்பு உள்ளது, இவர்களுடைய நெட்வொர்க் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விசாரணை முடிவில் தெரியவரும் என்று கூறினார்.

இதையும் படிங்க:அமெரிக்காவில் சோழர் கால பார்வதி சிலை...மீட்கும் பணி தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details