தூத்துக்குடி: கீழஈரால் அரசு பொது மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர் ஆனந்த் மற்றும் வனிதா தம்பதி தங்களது 5 வயது மகனுடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து மருத்துவர் வனிதா கூறுகையில்,
எனது கணவர் மருத்துவர். ஆனந்தும் நானும் கீழ ஈரால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஐந்து வருடங்களாக மருத்துவராக பணியாற்றி வருகிறோம். கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகிறோம், என்னை ஜாதி ரீதியாகவும் பெண் என்பதாலும் என்னிடம் எதையும் வெளிக்காட்ட முடியாததால், எனது கணவரை கடுமையான துன்புறுத்தலுக்கு கோவில்பட்டி மருத்துவத்துறை துணை இயக்குநர் மற்றும் கண்காணிப்பாளர் இருவரும் சேர்ந்து தங்களை தொந்தரவுக்கு உள்ளாகி வருகின்றனர், என கூறினார்.
இதுகுறித்து மருத்துவர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் 2017 இல் இருந்து கீழ ஈரால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடமாடும் மருத்துவராக பணியாற்றி வருவகிரேன். கண்காணிப்பாளர் ராஜா தூண்டுதலின்பேரில் கோவில்பட்டி மருத்துவத்துறை துணை இயக்குநர் போஸ்கோ ராஜா தனக்கு தொடர்ந்து தேவையில்லாத மெமோ கொடுத்து வருகிறார்.