தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்கஸ் இருவரும் விசாரணைக் கைதிகளாக இருந்தனர்.
நேற்று இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர்கள் இருவரையும் காவல் துறையினர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இதையடுத்து, பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார். அதேபோல் இன்று காலை அவரது தந்தை ஜெயராஜும் உயிரிழந்தார்.
இதனால், இருவர் மரணத்திற்கும் சாத்தான் குளம் காவல் துறையினர் தான் காரணம் என்றும், இருவரையும் தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க:கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலர்களை மகிழ்விக்க நகைச்சுவை நிகழ்ச்சி!