தூத்துக்குடியில், கோவில்பட்டி பிராதான சாலையில் உள்ள ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி ஆட்சியரிடம் மனு - District collector
தூத்துக்குடி: கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.
அப்போது கே.சீனிவாசன் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி நகரம் இரண்டாவது பெரிய நகரமாகும். இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து காரணமாக மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள கழிவு நீர் வெளியேறி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதேபோல் மக்கள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை கடந்த ஒரு வருடமாக சாலை விரிவாக்க பணியை மேற்கொண்டு வருகிறது.
பிரதான சாலையில் விரிவாக்கத்திற்கு தடையாக உள்ள ஓடை கடைகளை அப்புறப்படுத்த வேண்டும், பாதிக்கப்படும் வணிகர்களுக்கு மாற்று இடத்தில் கடைகள் அமைத்து கொடுக்க வேண்டும், பிரதான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்.